ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிட அகம்
அடியேன் ஏழாவது தலைமுறையாக 450 வருட பாரம்பரியத்தில் அடியேனும் எனது குடும்பத்தாரும் அனைவரும் ஜோதிட தொழிலில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம்.
அடியேன் எனது முன்னோர்கள் ஆசியின்பாலும், கடந்த 33 வருடங்களாக இந்த ஜோதிட தொழிலை பார்த்து வருகின்றேன். ஆனால் எனது பாரம்பரியம் ஏறத்தாழ 450 வருடம் கொண்டதாகும்.
அடியேன் ஜோதிட சாஸ்திரத்தில் எனது பாட்டனார் தந்தையாரிடம் கற்றது மட்டுமல்லாமல் 23 குருமார்களையும் அடியேன் பெற்று அவர்களிடம் கற்று என்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு, தகுந்த ஜோதிடத்தில் நல்ல விளக்கங்களை ஆலோசனைகளையும் அனைவரையும் குடும்ப நண்பர்களாக பெற்று அவர்கள் வாழ்க்கை வளம் பெற இறைவனை வணங்கி, வழிநடத்திக் கொண்டிருக்கின்றேன்.
வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுக்ர வராஹம் என்று அழைக்கப்படும் கடவுள் வைத்தீஸ்வரனை (மருத்துவத்தின் கடவுள்) பெருமாளாகக் கொண்டுள்ளது. இந்த கோவில் ஆறிருக்கான மருந்து மற்றும் குணமடைதலின் முக்கிய தலமாகக் கருதப்படுகிறது.
இந்த கோவில் நாடி ஜோதிடத்திற்குப் பிரபலமாகும். நாடி ஜோதிடமென்பது பழமையான ஜோதிட முறையாகும், இதில் நம் எதிர்காலம் பற்றிய தகவல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்த ஓலைச்சுவடிகள் பண்டைய முனிவர்களால், குறிப்பாக அகத்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது மற்றும் வaitheஸ்வரன் கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.
சில ஜோதிட முறைகள்
திருமணப் பொருத்தம்
ஆண் பெண் இருவர் ஜாதகத்தை வைத்து, கணிதம் செய்து இருவருக்கும் உள்ள நட்சத்திரப் பொருத்தம், கிரக பொருத்தம், பாதசாரப் பொருத்தம், கிரக சேர்க்கை பொருத்தம், இருவருக்கும் உள்ள தோஷங்கள் அதனுடைய நிலை, திசை புத்தியின் நிலைபாடு, குடும்ப வாழ்க்கையில் இருவருடைய பொருத்தம், இவ்வாறு பொருத்தத்தை துல்லியமாக முடிவு செய்கின்றோம்.
மருத்துவ ஜோதிடம்
ஒருவரின் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் கணித்து, அவருடைய உடல் ரீதியாக என்ன பாதிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது அதை எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்பது மருத்துவ ஜோதிட முறையாகும். மருத்துவ ஜோதிடத்தின் மூலம் தனது வாழ்நாளில் ஏற்படக்கூடிய நோய் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும், பிறகு அதற்குரிய தீர்வு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆருட ஜோதிடம்
நீங்கள் கேட்கக்கூடிய பலன்கள் உங்களுக்கு என்ன நடக்கும் நடக்கும் என்பதை டாரட் ஆருட பலன்கள் ஆகும் இந்த முறை வெளிநாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஜாமக்கோள் பிரசன்னம்
ஜாமக்கோள் பிரசன்னத்தில் நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு அந்தக் கேள்விக்கு உரிய சம்பவங்கள் எப்பொழுது நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும், இதன் மூலம் ஜாதகம் இல்லாதவர்களும் பிரசன்ன மூலமாக தங்களுடைய பலாபலன்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்கக் கூடிய கேள்வி தான் அதற்குரிய தீர்வு பிரசன்னத்தின் மூலமாக கிடைக்கும் கேள்வியே பிரசன்னம் ஆகும்.
குலதெய்வ பிரசன்னம்
தங்களுடைய குலதெய்வத்தின் நிலை அறிய அந்த குலதெய்வம் தற்பொழுது எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது அதனுடைய சக்தி என்ன உங்களுக்கு குலதெய்வத்தின் சக்தி வேலை செய்கிறதா என்பதை சோலி மூலமாக கண்டறிவது குலதெய்வ பிரசன்னம் ஆகும்.
குலதெய்வ பிரசன்னம் என்பது தேவப்பிரசன்னம் ஆகும்.
இதேபோல் சோழி பிரசன்னம் கணிதமும் செய்து வாழ்க்கை நிலைகளை பார்க்க முடியும்.
தாம்பூல பிரசன்னம்
வெற்றிலை வாங்கி வந்து வெற்றிலையை வைத்து பிரசன்னம் பார்ப்பது தங்கள் குலதெய்வம் நிலை என்ன என்பதை மற்றும் பல கேள்விகளை கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
நேரில் வர முடியாதவர்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து ஒரு எண் சொல்லி அதற்குரிய என்னை தாம்பூலமாக எடுத்து பிரசன்னமாக உங்களுக்கு பலன் சொல்ல முடியும்.
தேதி ஹீப்ரு எண் கணிதம்
என் கணிதம் ஹீப்ரு முறையில் சக்தி சூட்சம என் பித்தா கரஸ் என் பிறந்த தேதி, பிறந்த தேதி வருடம் மாதம் அனைத்தையும் கூட்டி, பிரமிடு முறையில் கணித்து மிக துல்லியமாக சொல்லக்கூடிய உயர்நிலை எண் கணித முறையாகும்.
எண் கணிதம் நியூமராலஜி கணிதத்தின் படி உங்களுக்கு மிகத் துல்லியமாக உங்கள் பெயர், உங்கள் தொழில் ஸ்தாபனத்தின் பெயர், தங்களின் இல்லத்திற்கு பெயர், தங்களின் தொழில் பொருள்களுக்கு பெயர் மிகச்சிறப்பாக வைத்து தரப்படும்.
சந்திர நாடி
பிறந்த தேதி நேரம் இவை அனைத்தையும் வைத்து இப்பொழுது அவருடைய மனநிலை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை காண்பது அதற்குரிய கணிதம். சந்திரன் என்பது ஒவ்வொருவருடைய மனதைக் தெளிவாக குறிக்கக்கூடிய கிரகமாகும்.
நாடி ஜோதிடம்
விரல்முத்திரை
நாடி ஓலையை தேடுதல்
நாடி ஓலையின் வாசிப்பு
காண்ட பாவக காரகத்துவம் விளக்கம்
லக்ன காண்டம்
வாழ்க்கை என்ற ஜாதக கோலத்தின் முதல் புள்ளி லக்னமாகும். உடல் கூறில் லக்னபாவம் என்பது தலையின் மேல் பகுதியான நெற்றி, மூளை போன்றவற்றை லக்ன பாவம் குறிக்கும். லக்ன பாவம் பன்னிரண்டு பாவங்களின் காரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும்.
லக்ன பாவத்திலிருந்து மற்ற பாவங்களுக்கு காரகங்கள் பிரித்து தரப்படுகின்றன. உடலில் உயிர் இருக்குமிடம் மூளை. எனவே லக்னம் என்பது மூலம் அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும். ஜாதகரின் உடலின் பொதுவான தோற்றத்தை லக்ன பாவமே நிர்ணயிக்கும்.
தலைவர்கள், தலைமை பண்பிற்கு சொந்தக்காரர்கள், திறமைசாலிகள், கௌரவமானவர்கள் போன்றவர்கள் லக்ன பாவத்தை கொண்டே அறியப்படுகின்றார்கள்.
ஜாதகரின் பொதுவான எண்ண ஓட்டங்கள், சுய முயற்சிகள், செயல் திறன், ஆரோக்கியம், பெருந்தன்மை, ஒழுக்கம், புகழ், நிர்வாக திறன், ஒரு துறையில் சாதனை படைக்கும் திறன், வெற்றி அல்லது தோல்வி, ஆண்மை மற்றும் பெண்மை தன்மைகள், உடலின் நோய் எதிர்ப்பு திறன், தான் என்ற எண்ணம், பணத்தை விட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல் போன்றவைகள் லக்னபாவத்தின் காரகங்கள் ஆகும்.
2ம் காண்டம்
முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய், நாக்கு, பற்கள், தாடை, கன்னம், தொண்டை போன்றவற்றை 2ம் பாவம் குறிக்கும். ஒருவரது சொந்த கருத்தினை விளக்கும் பேச்சுத்திறன், பார்வை, சுவையான உணவினை உட்கொள்ளும் அமைப்பு, ஒருவரது முக லட்சணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
ஒருவருக்கு கிடைக்கக்கூடிய பணவரவு அவரது சொந்தபணம், கையிருப்பு பணம், செல்வம், சொந்த பணத்தை பாதுகாக்கும் திறன், எளிதில் பணமாக மாற்றத்தக்க பொருட்கள், ஒருவர் தனது சொத்தை அனுபவிக்கும் யோகம், வாழ்க்கைக்கு தேவையான பணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
3ம் பாவம் என்பது பத்திரங்களை குறிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றுக்கு பத்திரங்கள் அவசியமாகும். 2ம் பாவம் 3ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் 2ம் பாவ காரகங்களுக்கு பத்திரங்கள் தேவையில்லை. எனவே இதனை எப்போது நாம் நினைக்கிறோமோ அப்போதே (எந்த இடத்திலும்) எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
லக்னம் என்பது ஜாதகரை மட்டும் குறிக்கும். 2ம் பாவம் என்பது ஜாதகரையும், அவரோடு சேர்ந்த அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் குறிக்கும்.
ஜாதகரின் தனம் வரும் வழிகள் மற்றும் தனம் செல்லும் வழிகள், பாலகல்வி, தாயின் மூத்த சகோதரம், உடல் உணவை ஏற்றுக்கொள்ளும் திறன், போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.
3ம் காண்டம்
உடல் கூறில் 3ம் பாவம் , காது, தோள்பட்டை, கைகள், கழுத்தெலும்பு, கழுத்திற்கு கீழ் செல்லும் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின், ரத்த நாளங்கள், உணர்வுப் புலன்கள் போன்றவைகளை குறிக்கும். 2ம் பாவம் பேச்சு என்றால் 3ம் பாவம் எழுத்தினைக் குறிக்கும். எனவே எல்லா வித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும், ஒப்பந்தங்களையும் 3ம் பாவமே குறிக்கும்.
3ம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றைகளையும், சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று போன்றவற்றையும் குறிக்கும்.
ஆரம்ப கல்வி கற்பதற்கேற்ற மனச்சார்பு, அறிவு, குறுகிய பயணம், சாலை, சைக்கிள், பஸ், கடிதம், கணிதம், தபால் நிலையம், தொலைபேசி, கைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ செய்திகள், எதையும் சுருக்குதல், அடையாள சின்னங்கள், சான்றிதழ்கள், காசோலைகள், உலகில் உள்ள அனைத்து பதிவுகள், மத்தியஸ்தம், தூது செல்லுதல், பத்திரிகைகள், விளம்பரம், கையெழுத்து, நூலகம், அச்சு, குத்தகை, வதந்திகள், கோள் சொல்லுதல், மனக்குழப்பம், புத்தி பேதலித்தல், ஏற்கனவே இருப்பவைகளுடன் பலவற்றை புதிதாக சேர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய பரிணாமங்களை உருவாக்குதல் போன்றவைகள் 3ம் பாவத்தின் காரகங்களாகும்.