கடக லக்னம்

உங்கள் லக்னம் கடகம் அல்லது உங்கள் ராசி கடக ராசி இருக்கிறதா?

பலன்களைப் படித்துப் பாருங்கள் பிறகு தங்கள் கருத்துக்களை தாருங்கள்.

கடகம்

1, அழகானவர், அன்பானவர், சமயோசிதம் ஆனவர்.

2, இளமையில் ஒல்லி மத்திம வயதில் பருமன் ஆவார்.

3, சிறிய கழுத்து, அகன்ற மார்பு, வேகமான நடை உடையவர்.

4, குறுகுறுப்பான பார்வை, வசீகரக் கண்கள், அழகான கண்ணம் உடையவர்.

5, குறிப்பிட்ட நேரத்திற்குள் தன் பணிகளை எவ்வளவு சிரமப்பட்டாலும் முடித்து விடுவார்.

6, முடிவு செய்துவிட்டால் எதிர்ப்புக்கள் வந்தாலும் அதை முறியடிக்கும் வரை ஓய மாட்டார்.

7, ஞாபக சக்தி அதிகம் உண்டு

8, எதையும் முன்கூட்டியே அறியும் நுண்ணறிவு உண்டு.

9, வேலையாட்களிடம் அபார நம்பிக்கை வைப்பார் அவர்களுக்காக எதையும் செய்வார்.

10, தீர ஆலோசித்து முடிவெடுப்பார்

11, முதலில் எவரையும் சந்தேகிப்பார் பின் பழகிய பின் தன் வெள்ளை உள்ளத்தை பறி கொடுப்பார்.

12, கொடுத்த வாக்கு தவற மாட்டார், இவரிடம் பிறரும் வாக்குத்தவரக்கூடாது.

13, குடும்பப் பொறுப்பு மிகுந்த அக்கறை உடையவர், சில சமயத்தில் முன்கோபம் இருக்கும்.

14, திருமண விஷயங்களில் பெரும்பாலானவர்கள் அதிக செலவு செய்ய நேரிடும்.

15, மணிக்கணக்கில் பேசுவதில் வல்லவர்.

16, சகோதரி ஒத்து வராது இளைய சகோதரத்தால் தொந்தரவுகள் இருக்கும்.

17, இ என் டி தொண்டை பிரச்சனை சீட்டு எம்எல்எம் ஒரு நஷ்டம் உண்டு.

18, பக்கத்து வீட்டு எல்லை பிரச்சினை வரும் பத்திர பிரச்சனை உண்டு.

19, சிறுவயதிலேயே வீடு வாகனம் மனை அமைத்துக் கொள்ள ஆர்வம் உண்டு அமையும்.

20, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தொழில் புகழடைய கூடியவர்.

21, தாத்தாவுக்கு இருதார யோகம் அல்லது விருப்பத் திருமணம்.

22, ஆக்ரோஷமான தெய்வமும் வேட்டைக்கார தெய்வமும் ஆயுதம் உள்ள தெய்வமும் பிடி மென் எடுத்து குல தெய்வத்தை வணங்குவதும் உண்டு.

23, மாமன் புகழ் பெற்றவர் அல்லது மாமனுக்கு தொழில் உண்டு

24, குடல் சார்ந்த நோய் மஞ்சள் காமாலை உண்டு.

25, முதுகெலும்பு சார்ந்த பிரச்சினை உண்டு விபத்து உண்டு தப்பித்து விடுவார்.

26, வாடகை வருமானம் உண்டு

27, வாய்வு மலச்சிக்கல் பிரச்சனை உண்டு

28, சலிப்பில்லாமல் உழைக்கக்கூடிய மனைவி அமைவார், எனினும் அவர் மீது தன் அதிகாரத்தை செலுத்திக் கொண்டே இருப்பார்.

29, மனைவியிடம் சிரமத்தை சில சமயம் உணர்ந்தாலும் இது உன் விதிப்பேன் என்று சொல்வார் சில சமயம் கெஞ்சிப் பேசுவார் பிறகு கோபத்துடன் பேசுவார்.

30, கூட்டாளிகளும் நண்பர்களும் இவருடைய ஆலோசனையை கேட்டு தான் குடும்ப முடிவுகள் உட்பட எதையும் எடுப்பார்கள்.

31, மனைவி வந்த பிறகு யோகத்தை அடைவார்.

32, எல் ஐ சி லாபம் உண்டு, கடன் வாங்க தயங்க மாட்டார்.

33, கூட்டாளிகளுக்கு தொழிலை விட்டுக் கொடுப்பார்.

34,வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப இவரிடம் தான் வருவார்கள்.

35, சிறிய விஷயங்களிலும் அதிக கவலை கொள்வார்,

36, கூட்டாளிகளுக்கு தொழிலை விட்டுக் கொடுப்பார்.

37, பழைய பொருட்களை சேகரித்து பத்திரப்படுத்துவார் பழைய பொருட்கள் விரும்பி வாங்குவார் அதனால் ஆதாயம் உண்டு.

38, தூங்கும்போது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும்.

39, எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் பிடித்த பிடியை விட்டுக் கொடுக்க மாட்டார்.

40, எல் ஐ சி லாபம் உண்டு

41, வெளித்தோற்றத்தில் பக்தி இல்லாதவர் போல் தோன்றினாலும் அந்தரங்க பக்தியுடையவர்.

41, குரு பக்தி முருகன் பக்தி உடையவர்

42, தன் நலனை குறித்தும் பிறர் நலனை கருவியும் கையில் கிடைத்ததை தாராளமாக வழங்குவார்.

43, பெரும்பாலானவருக்கு இறுதிவரை தந்தையின் அன்பு பற்று, பாசம் ஒற்றுமை இருக்கும்.

44, தகப்பனார் இவருக்கு பெரும்பாலும் அதிர்ஷ்டம் சேரும்

45, தந்தைக்கு நீண்ட நோய் அல்லது நீண்ட கடன் இருக்கும்

46, தந்தைக்கு வாடகை வரும் உண்டு. இரண்டு வருமானம் உண்டு

47, தந்தை மத நம்பிக்கை உடையவர் தீர்த்த யாத்திரை உண்டு.

48, மண்ணெண்ணெய் பெட்ரோல் மருத்துவம் கலை நடிப்பு ஊருக்கு எந்திரம் ஹோட்டல் ஆரம்பித்தொழில் போலீஸ் ராணுவம் கவரிங் கொலுசு ஓவியம் சார்ந்த தொழில், கார் டாக்ஸி லாரி வாடகை வாங்குவது விற்பது,
தொழில்கள் சிறப்பு

49, ஜோதிடம், சொத்து நிலப்புலன் காண்ட்ராக்ட் சார்ந்த தொழில் நுணுக்கமான ஜோதிடத் தொழில் சிறப்பு.

50, லாவங்கள் நன்றாக இருக்கும் ஆனால் இவர் அதிக லாபம் எதிர்பார்த்து அதுவே அவர்களுக்கு சில சமயம் பாதகம் அமையும்.

51, போராட்டத்திற்குப் பின் இவர்கள் ஆசை நிறைவேறும்.

52, இசை பாட்டு கலை நடனம் சினிமா டிவி ஆர்வம் உண்டு இதில் இவர் வருவார்.

53, வெளிநாட்டு தொடர்பு உண்டு வெளி மாநிலத் தொடர்பு உண்டு.

54, இரவில் அதிக நேரம் கண் விழிப்பு உண்டு சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குவார்.

55, புதிய ஜோதிட கருத்துக்களையும் அல்லது புதிய கலை இலக்கிய புதுமை புரட்சி கருத்துக்களையும் உருவாக்குவார்.

56 நீர் பாங்கான இடம், தெளிவான நீர் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்கும் நீர் வயல்வெளி கரையான் புற்று ஈசல் புற்று பாற்கடலை கடைந்த ராசி.

57, வெளி மாநில வெளிநாட்டு ராசி.

58, கஷ்டப்பட்டு உயர்ந்தவர்களை சொல்லும் ராசி, அவஸ்தைப்படும் ராசி.

59, பெரிய பள்ளிகள் பூரான்கள் கூர்ந்து செல்லும் பூச்சிகள் நண்டு தவளை குழவி ராசி.

60 விபரீத ராஜயோக ராசி

61, இவர் வீட்டு அருகில் அரசாங்க வீடு அல்லது ஒரு பொது நிர்வாக இடம் ஒன்று இருக்கும்.

62, தகுதிக்கு வீரிய பதவி ஒன்று அரசியல் ஈடுபாடு உண்டு. அசைவ பிரியர்.

பூசம் நட்சத்திரம்
63,இரண்டு திருமணம் முடித்தவர்களை சொல்லும்.

64, சாமி ஆடி அவர்களையும் பூஜை செய்தவர்களையும் கோவில் பராமரித்தவர்களையும் சொல்லும்.

65, நெஞ்சு வலியால் அவஸ்தை பட்டவர்களை சொல்லும்.

66, காணாமல் போனவர்களையும் சொல்லும்.

ஆயில்ய நட்சத்திரம்

67, சமையல் சாப்பாட்டு பிரியர் சமையல் கலையில் வல்லவர் அல்லது அவரை விரும்பி நட்பு வைத்திருப்பார்.

68, ஆண் பூனை புதனின் நட்சத்திரம் தாய் தந்தையை பிரிந்து வாழ்வதை சொல்லும் நல்லது இவர்களை விட்டு கொஞ்சம் பிரிந்து வாழ்ந்தால் வெற்றி பெற்றதை சொல்லும்.

69, அரசாங்க அரசியல் ஈடுபாடு
நலனின் நட்சத்திரம்

ஒன்றுக்கு உரியவர் சந்திரன்
70, அழகானவர் வழுக்கை தலை உடையவர்

இரண்டுக்கு உரியவர் சூரியன்
71, கண் பல் பெரிதாக இருக்கும்.

72, தற்பெருமை அதிகம்

73, பிரம்மாண்ட பேச்சு

3+12+புதன்

74, இளைய சகோதரத்தால் விரையம் சகோதரனால் விரையம்.

74, விரல்களில் சேதம்

75, சகோதரர் வெளிநாடு செல்வார், சகோதரர் பிறக்கும் போது ஒரு கருமம் பெரும்பாலான வீடுகளில் வருகிறது.

76, இ என் டி ப்ராப்ளம் இருக்கும் ரெக்கார்டு பேப்பரில் பிரச்சனை இருக்கும் ரெக்கார்டு பேப்பர் தொலைபேசி அல்லது சரி செய்யாமல் இருக்கும்.

4+11+சுக்கிரன்
77, தாய் மூத்தவர் அல்லது தாய் நாலாவதாக இருப்பார்

78, தாய் தந்தை வழியில் இரண்டு திருமணம் செய்தவர்கள் இருப்பார்கள்.

79, குடும்பத்தில் இரு திருமணம் உண்டு தந்தை தாத்தா வழியில் இரு திருமணம் உண்டு.

80, பெண்களால் தொல்லை பெண்கள் எதிரி.

81, வீடு வண்டி வாகனம் உண்டு சொத்து உண்டு ஒரு சிலருக்கு தந்தையை விட தாய் மூத்தவராக இருப்பது இந்த ராசியில் உண்டு.

5+10+செவ்வாய்
82, குழந்தை உருவான உடன் குழந்தை பிறந்தவுடன் தொழில் நடக்கும் சிலர் குடும்பத்தில் ஒரு சில கர்மங்கள் முதியோர் கரங்கள் நடக்கின்றன.

83, தர்ம சிந்தனை உண்டு கோவில் கும்பாபிஷேகம் செய்வது உண்டு

84, குலத் தொழில் செய்வது உண்டு ஜோதிடம் பூஜை நல்லது ஜீவசமாதி வழிபாடு நல்லது.

85, குழந்தை தாமதம் பிரிந்து வாழக்கூடியது தாத்தா வழியில் தத்து போனவர்கள் உண்டு.

86, தாத்தா வழியில் திருமணம் ஆகாதவர்களை சொல்லுகிறது அல்லது கோயில் கட்டளைதாரர்கள் உண்டு.

87, கோயில் கணக்குப் பார்த்தவர்கள் உண்டு.

88, மருத்துவத் தொழில் ஜோதிடத் தொழில் வெற்றி குழந்தை ஒரு பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டு.

6+9+குரு
89, கடன் வாங்க கூடாது ஜாமீன் போடக்கூடாது அப்படி செய்கின்ற பொழுது பிரச்சனை ஏற்படுகிறது.

90, தந்தை வழி சொத்தில் ஒரு வழக்கு உண்டு தந்தை வழி சொத்தை அனுபவிக்க தடை.

91, உத்தியோகம் தேடி வரும்

92, தந்தைக்கு கடன் ஏற்படும் அல்லது தந்தையாரால் இவருக்கு கடன் ஏற்படும்

93,உத்தியோகத்திற்கு வெளி மாநிலம் வெளிநாடு செல்வது சிறப்பு.

94,7+8+சனி பகவான்
திருமண வாழ்வில் கசப்பு உண்டு அல்லது திருமண தாமதம் திருமணத்தில் ஒரு தடை

95, பொதுச் சேவையில் ஈடுபாடு

96, தாம்பத்திய சுகம் குறைவு ஒரு சிலருக்கு வயது முதிர்ந்த கணவன் அல்லது மனைவி

97, ஒரு சிலருக்கு காதல் திருமணம் ஏற்படுகிறது

98, திருமணம் ஆனபின் ஏழு வருடம் மட்டுமே வாழ்க்கை சிறப்பு அதன் பின் சில மாற்றங்கள் ஏற்படுகிறது

99, யூரினரி பிரச்சனை சில பாதிப்புகள்

100, கூட்டத்தொழில் ஆகாது கூட்டுத்தொழில் செய்கின்ற பொழுது சில பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது

101, கடகம் நண்டு ராசியாகும் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இவர்கள் எந்த இடத்தில் சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள்.

102, கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க சென்று விடுவார்கள் பலருடன் இருப்பதையே விரும்புவார்கள்.

103, இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றிருப்பார்.

104, ஒரு கஷ்டம் நீங்க தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் கடன் வாங்கி யாவது பதிவு செய்யக்கூடியவர்.

105, கடன் வாங்கியவன் ஓடிவிட்டான் நான் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வார்கள்.

106, பிறந்துவிட்டால் பத்து பேருக்காவது நன்மை செய்ய வேண்டும் என்கின்ற இலக்கு இவருக்கு உண்டு.

107, எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள் ஜல ராசி என்பதால் கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் நல்ல ஞாபக சக்தியும் உண்டு.

108, மிகவும் பலசாலி தைரியசாலி அறிவாளி புத்தி கூர்மையானவர் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

109, குழந்தைகளிடம் அன்பு உண்டு இரவில் பலம் உள்ளவர் சந்திரனைப் போல் சிறிது காலம் மங்கி மறைவதும் சிறிது காலம் பெயரும் புகழும் பெற்றும் வாழ்வது இவர்கள் வாழ்க்கையில் இருக்கும்.

110, குடும்ப வாழ்வில் அக்கறை தீர்க்கமான பார்வை உடையவர் திடீரென உணர்ச்சி அடைவார் மன்னிக்கும் குணம் உண்டு பதட்டமானவர் சந்தேகப் பிராணி தாய்மை உணர்வு உடையவர் தாய் பாசத்திற்கு அடிமையானவர்.

111, அரசாலும் யோகம் பெற்றவர்கள் தலைமை பதவிக்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவார்.

112, ஒரு காரியத்தை செய்ய சொன்ன உடனே செய்து காட்டுவார் விடா முயற்சியும் கொள்கையும் விட்டுக் கொடுக்காத குணமும் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.

113, தோளில் கை போட்டு தோழமை காட்டும் இயல்பு இவர்களைப் போல் யாருக்கும் இருக்காது.

114, அவசரக்காரர்களைப் போல் தோற்றம் அடித்தாலும் காரியத்தில் கண்ணா இருப்பார்கள் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதவர்கள்.

115,நகைச்சுவையோடு பேசும் ஆற்றல் கொண்டவர்.

116, பெரிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பார் குடும்பத் தலைவராக இவர்கள் பொறுப்பேற்கும் போது இடையூறு எதிர்ப்புகள் வருகிறது இந்த இடத்தில் பேச்சில் கவனமாக செயல்பட வேண்டும்.

117, அரசியல் அனுகூலம் ஆதாயம் பெற்ற குடும்பம் என்று சொல்லலாம் குடும்பத்தில் ஏற்றமும் இருக்கும் திடீரென இறக்கமும் இருக்கும் இன்பமும் இருக்கும் திடீரென துன்பமும் வந்து சேரும் .

118, அழகான உதடுகளும் அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும் பேச்சில் உறுதி இருந்தாலும் மெல்லிய குரலில் தான் பேசுவார்கள் பார்வையில் ஓரளவிற்கு நல்ல ஞாபக சக்தி அறிவாற்றல் உடையவர்.

119, இவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கை துணை சலிப்பில்லாமல் குலைக்க கூடியவராக இருப்பார் எவ்வளவு தான் உழைத்தாலும் கடக ராசிக்காரர்கள் ஏதாவது குறை கூறிக்கொண்டு தங்களுடைய அதிகாரத்தை செலுத்தி க் கொண்டும் இருப்பார்கள்.

120, இவர்களுக்கு நுரையீரல் வயிறு உணவுக்குழாய் மற்றும் குடலுக்கு இடையில் உள்ள ஜவ்வு மூட்டு எலும்பு கால் வீக்கம் நரம்பு பிரச்சனை இதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படுகிறது.

பொதுவாக லக்ன, ராசி பலன் என்பது ஒரு ஜாதகருக்கு எண்பது சதவீதம் சரியாக வரும் மற்ற நிலைகள் எல்லாம் இணைத்து பார்க்கின்ற பொழுது பலன்கள் உறுதியாக எடுத்துக் கொள்ள முடியும், மேலே சொன்ன பலன்கள் நீங்கள் எந்த நூல்களிலும் படிக்க முடியாது…