விருச்சிக லக்கினம் அல்லது ராசிக்காரர்களுக்கு உண்டான பலன்கள்
1, இவரை நண்பராக அமைத்துக் கொண்டால் பயன் உண்டு
2, சிலர் மேல் பொறாமை குணம் கொள்வது என்பதை காட்டிலும் அதை விட்டு விட்டால் மனிதருள் மாணிக்கமாக உயர்ந்து விடுவார்கள்.
3, பிறருக்கு கஷ்டமான வேலை எதுவோ அதுவே இவருக்கு சுலபமான வேலையாக அமையும்.
4, நெருங்கி பழகும் நண்பர்கள் தவறான வழியில் சென்றால் அவரை கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்து அதை உணர்த்துவார்.
4, தனது குற்றத்தை மறைப்பார் பிறர் குற்றத்தை வெளிக்கொண்டு விடுவார்
5, அவசரக்காரர் புள்ளி ஆனவர் உருளையான உடல் தோற்றம் கொண்டவர்
6, எதையும் தெரிந்தது போல் தோற்றம் உடையவர்
7, போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்ள ஆர்வம்
8, பேச்சில் வல்லவர் விரைவாக பேசுவார் பிறரையும் பேச வைப்பார்
9, முன் கோபி திட்டமிட்டு கோவத்தை வெளிப்படுத்துவார்
10, துப்பறிவாளன் சந்தேக குணம் உள்ளவர்
11, அமானுஷ்ய அறிவு உண்டு மருத்துவ குணம் உண்டு ஜோதிடம் நன்று
12, நல்ல குடும்பம் அமையும் நல்ல மனைவி நல்ல மக்கள் அமைவார்கள்
13, தேவைக்கேற்ற பணம் அமையும் பண பற்றாக்குறை இருக்காது பெரும்பாலானோருக்கு இது பொருந்தும்
14, யாருடைய பணமாவது இவருக்கு வந்து சேருகிறது
15, எப்போதும் வருமானத்தில் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்
16, குடும்பத்தை தொழிலை விட்டு விலகி வித்தியாசமாக பொது வேளையில் ஈடுபடுவார்
17, பின் வயதில் பொருளாதாரம் நன்றாக இருக்கும்
18, ஷேர் மார்க்கெட் அதிக ஆர்வம் இருக்கும் சிறிய லாபம் கிடைக்கும் அதை நம்பி இறங்கி பிறகு மாட்டிக்கொண்டு நஷ்டம் அடைவார்
19, ஒரே சமயத்தில் இரண்டு எல்ஐசி போடுவார்
20, டெபாசிட் யோகம் உண்டு
21, கண் பிரச்சனை வரும்
22, மூன்று சொத்துக்கள் அல்லது மூன்று பத்திரம் உள்ள சொத்துக்கள் கிடைக்கும்
23, வாடகை வீடு இருந்தால் அடிக்கடி இடமாற்றம் ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாது
24, அஞ்சல் வழி கல்வி உண்டு
25, சகோதர சகோதரிகள் உண்டு ஒற்றுமை குறைவு
26, இவர் கொள்கை செய்கை சகோதர சகோதரிகளுக்கு பிடிக்காது அவர்களுடைய கொள்கை செயல்பாடு இவருக்கு பிடிக்காது
27, மாமனார் பகை உண்டு ஆனாலும் சரி செய்து பிறகு அவருடைய சொத்துக்கள் கிடைக்கும் இங்கே சிலருக்கு மாறுபடுகிறது
28, சொத்து அமைவது அல்லது வீடு கட்டுவதில் தாமதம் உண்டு
29, உயர்கல்வி தடை இருக்கும் அதிக பள்ளி அல்லது மூன்று பள்ளிகள் மாறி படித்தவராக இருப்பார் இது பெரும்பாலானவருக்கு ஒத்துப் போகிறது
30, தாய்க்கு வருமானம் பண்ணும் தாய் தொழில் சப்போர்ட் உண்டு
31, சிலர் தாயை பிரிந்து வாழ்கிறார்கள், உறவினர் ஆதரவு குறைவு
32, பெற்றோருடைய ஆதரவு எதிர்பாராமல் சுயமாக முன்னேற கூடியவராக இருக்கிறார்கள்
33, சொந்த வீடு இருந்தால் வாஸ்து குறைபாடுகள் இருக்கும்
34, 50 வயதுக்கு மேல் வசதியான வீடு அமைகின்றது
35, சிறுவயதில் வீடு அமைந்தால் அரைகுறை வீடாக இருக்கின்றது
36, சிலருக்கு விவசாய சொத்துக்கள் வருகின்றது
37, ஆரம்பப் பள்ளி குறைவு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சராசரி மதிப்பெண் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காது
38, கல்வி இல்லை என்றாலும் தொழிலில் முன்னேற்றம் உண்டு
39, குலதெய்வம் இடமாறி வந்த தெய்வமாக இருக்கும் அங்கு பெரிய அரச மரம் ஒன்று இருக்கும் அல்லது ஆலமரம் அருகில் இருக்கும்
40, ஆண் குலதெய்வம் பெண் குலதெய்வம் இரண்டும் இருக்கும் அல்லது இரண்டு இடத்தில் குலதெய்வம் கோவில் இருக்கும்
41, தாத்தா வழியில் காணாமல் போனவர் அல்லது இரு திருமணம் ஆனவர் உண்டு
42, குலதெய்வம் அருகில் இருக்கும் குலதெய்வ வழிபாடு தாத்தா காலத்தில் இருந்து தடைகள் இருந்திருக்கும்
43, குழந்தைகளால் பயன் உண்டு கடைசி வரை குழந்தைகள் இவரை பார்த்துக் கொள்வார்
44, ஒரு குழந்தையை நினைத்து அவருடைய வாழ்க்கையை நினைத்து அல்லது வாழ்க்கை அமைவதில் தாமதம் என்று கவலை கொள்வார்கள்
45, மருத்துவம் ஜோதிடர் ஆசிரியர் பணி நன்று
46, பரிசு வரும் யோகம் உண்டு, கவிதை கற்பனை பாட்டு உடையவர்
47, தெய்வ கடாட்சமும் குருநாதர் அருளும் நிறைய கிடைக்கும்
48, காதல் உடையவர், அதிர்ஷ்டம் உடையவர்
49, எதையும் ஒற்றுக் கொள்ளாத மனப்பான்மை இருக்கும் இந்த குணம் ஒன்றே இவருக்கு எதிரியாக இருக்கும்
50, உத்தியோகம் உண்டு முதலில் உத்தியோகம் பின்பு தொழில் செய்வார்கள் சிலருக்கு இதில் மாறுபாடு உண்டு
51, கடன் உண்டு நீண்ட கால கடன் உண்டு
52, ஒரு நாளினும் தலைமறைவாக வாழக்கூடிய சூழ்நிலையில் உண்டு
53, போலீஸ் ஸ்டேஷன் போகாத விருச்சிகம் இல்லை
54, வழக்கு இல்லாத விருச்சிகம் இல்லை, அப்படி நடக்கவில்லை என்றால் அவர் வக்கீல் டாக்டர் போலீஸ்காரராக இருப்பார்
55, எதிரிகள் அதிகம் ரத்தம் நரம்பு கட்டி தீப்புண் சார்ந்த வியாதி வரும்
56, மரம் ஏறினால் கீழே முறிந்து விழுவார், கால் தவறி கீழே விழுவதும் உண்டு
57, வழக்கில் கட்டாயம் வெற்றி பெறுவார்
58, கூட்டாளிகள் இவருக்கு உதவுவார்
59, கூட்டுத் தொழில் நன்று, பெண் நண்பர்கள் உண்டு
60, பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் உண்டு
61, சிக்கனமான மனைவி பொறுப்புடன் மனைவி எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்து வழிநடத்துவார்
62, மனைவியின் குடும்பத்தால் அல்லது அவர்களின் உறவினர்களால் அவமானம் அடையாத விருச்சிகம் இல்லை
63, உடல் நல குறைவு ஏற்பட்டால் இவருக்கு மனைவி சிறப்பாக பணிவிடை செய்வார்
64, திருமணத்தில் ஒரு மன குறைவு நிச்சயம் உண்டு
65, வாழ்க்கைத் துணை இவருக்கு பயப்படும்
66, மனதிற்குப் பிடித்த மனைவி அமையும்
67, மனைவிக்கு கல்வி அறிவும் உண்டு
68, படிப்பில்லாத மனைவி ஆயிடும் அறிவின் முதிர்ச்சி அதிகம் திருமணத்திற்கு பின்பு யோகம்
69, சிலருக்கு திருமணம் தாமதம் திருமணம் நடக்கும் போது ஒரு பிரச்சனை இருக்கும்
70, திருமண சமயத்தில் விருச்சிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் நிறைய விரயங்களை சந்திக்க நேரிடும்
71, நீண்ட ஆயுள் உண்டு, நீர்கண்டம் உண்டு
72, உயில் சொத்து உண்டு சொத்தில் ஒரு வழக்கு உண்டு
73, ஜாதகருக்கு ஒரு தீய பழக்கம் இருக்கும்
74, சொத்து பிரிக்கும் போது பிரச்சனை வருகிறது இவர்கள் பெற்றோர்கள் இருக்கின்ற காலத்தில் இவர்களுக்கு சொத்தை பிரித்து வைத்து விட வேண்டும்.
75, பத்திரத்தில் பிரச்சனை இருக்கும்
கண்டம் தப்பிப்பார்
76, முறையான ஆசான இடத்தில் மந்திர உபதேசம் எடுக்க மாட்டார்
77, இவரின் உதவியை பெற்றவர்கள் நினைத்துப் பார்ப்பது இல்லை எனவே இவர் எதிர்பார்ப்புடன் உதவி செய்ய வேண்டியது இல்லை
78, யோகா யாகம் இவற்றில் ஈடுபடுவார்
79, சங்கம் இயக்கம் ஈடுபாடு ஒரு டிரஸ்ட் ஈடுபாடு இருக்கும்
80, மந்திர உபதேசம் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்
81, இவருக்கு வெளி மாநிலம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு
82, இவருடைய குழந்தை வெளிநாடு வெளி மாநிலம் செல்லும்
83, அதிக ஆன்மீக நாட்டம் இருக்காது நவகிரக வழிபாடு அதிகம் செய்வார்
84 தந்தை வழியில் மன பாதிப்பு இருக்கும்
86, தந்தையால் ஆதரவு இருக்கும் பெரிய பையன் ஏதும் இருக்காது
87, தந்தைக்கு ஒரு தீய பழக்கம் கெட்ட பெயர் இருக்கும்
88, தந்தை ஓர் இடத்தில் நிற்காமல் உழைப்பார்
89, தீர்த்த ஸ்தல யாத்திரைகள் உண்டு
90, உணவுத் தொழில்கள் அரசு சார்ந்த அனைத்து தொழில்களும் சிறப்பு
91, காண்ட்ராக்டர், மருத்துவம், சுரங்கம், என்னை, பெட்ரோல், கறிக்கடை, அன்றாடம் அழியும் பொருட்கள், பண்ணைகள், விவசாயம், மீன் உணவு, செங்கல் சூளை, மணல் குவாரி, வீடு கட்டும் பொருள்களை விற்பது, காவல்துறை, ரசாயன பொருட்கள்,
92, டையிங், மருத்துவம் சார்ந்த தொழில்கள் நிரந்தர தொழில்களாக அமைகின்றது
93, மூத்த சகோதரருடன் தொழில் செய்யும் யோகம் செய்தால் பிரச்சனை வரும்
94, தொழிலை அவரிடம் விட்டுவிட்டு வந்துவிடுவார்
95, சித்தப்பா ஆதரவுண்டு திடீர் அதிர்ஷ்டம் உண்டு
96, எண்ணங்கள் நிறைவேறும் நண்பர்களால் உதவி உண்டு அவர்களால் அவமானமும் உண்டு
97, நண்பர் ஒருவர் துர்மரணம் அடைவார்
98, கட்டாயம் கடைசி காலத்தில் சேமிப்பு டெபாசிட் அதன் பயன் உண்டு
99, அதிக பிரயாணங்கள் உண்டு அதனால் லாபம் உண்டு திடீரென்று வெளி மாநிலம் வெளிநாடு யோகம் மனைவியுடன் சென்று வருவார்
100, இரண்டாவது குழந்தைக்கு வெளிநாடு யோகம் உண்டு, சுகமான தூக்கம் உண்டு தூக்கப் பிரியர், சாப்பிட்ட உடன் சிறிது நேரம் தூங்கினால் சிறப்பு
101, மனைவி தன் இரண்டாவது குழந்தை பெண்ணாக இருந்தால் அவருக்காக நிறைய விட்டுக் கொடுப்பார்
102, வீட்டருகில், அல்லது தொழில் செய்யும் இடம் அருகில், சாக்கடை துர்நாற்றம் குப்பை மேடு பல பேருக்கு வந்துவிடுகிறது
103,இவர்கள் வாங்கும் இடத்து அருகில் கிணறு இருக்கும் அல்லது அருகில் ஒரு சுடுகாடு இருக்கும்
104, பொதுவாக இந்த ராசியை தகப்பனுக்கு ஆகாத ராசி என்று சொல்வது வழக்கம்
105, பெரும்பாலும் தாய் தந்தையை பிரிந்து வாழ்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அல்லது தொழிலுக்காக வெளிநாடு சென்று வாழ்கிறார்கள்.
106, மனதில் ஒன்றை வைத்து வெளிப்படுத்தாத ராசி
107, எட்டில் ஒரு பங்கு மட்டுமே கஷ்டத்தை சொல்லும்
108, இவர்கள் வீட்டருகில் கோவில் உண்டு, வீட்டிற்கு வவ்வால் வரும்
109, பெரும்பாலானவருக்கு முதல் குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்படுகிறது அல்லது அபார்ஷன் ஏற்படுகிறது
110, இந்த ராசி உளவுத்துறை ரகசியத்துறை அமானுஷ்யம் ராசி என்று சொல்வோம்
111,அனுஷ நட்சத்திரம்
தொழிலதிபர்கள் மருத்துவ குணம் நிறைந்தவர்கள் அரசாங்க அரசியல் ஈடுபாடு உடையவர்கள் இருதார யோகம் ஜாதகருக்கு அல்லது தந்தைக்கு அல்லது தந்தை யார் வழியில் உண்டு, பெண்களால் அவஸ்தை உண்டு, தந்தை சொத்தை அனுபவிப்பதில் தடை உண்டு, இவர் வளர்ச்சியை பார்க்க தந்தை இருக்க மாட்டார், தந்தையான மன உளைச்சல்கள் உண்டு, வீட்டில் மருத்துவர்கள் உண்டு, சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் உண்டு, பதவி பிரச்சனை உண்டு, பெண்களிடம் மிகவும் கவனம் தேவை, பெண்களிடம் ஏமாற்றம் இருந்திருக்கும், தலை நரம்பு சம்பந்தம்மாக கவனம் வேண்டும்.
112,கேட்டை நட்சத்திரம்
கேட்டை கோட்டை கட்டி வாழும் என்பது பழமொழி
அதிக பூமி சேர்க்கை உண்டு, மற்றவர்களின் சொத்துக்கு பவர் கிடைக்கும், அதிக டாக்குமெண்ட்கள் இருக்கும், தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, பிறந்த வீட்டில் அல்லது தொழிற்சாலை கிணறு இருக்கும்,
தாயார் வீட்டில் கிணறு இருக்கும், தாய் வழியில் மனநிலை பாதித்தவர்கள் உண்டு.
113,1+6+செவ்வாய்
கடன் வாங்கி தொழில் செய்வார், கடன் வாங்க யோசிக்க மாட்டார், உத்தியோகம் செய்வது நல்லது, இவருடைய எதிரி பலவானாக இருப்பார்.
114,2+5+குரு
பேச்சு மென்மையாக இருக்கும், வாக்குப்பலிதம் உண்டு, ஜோதிடம் ஆசிரியர் வக்கீல், கௌரவமான வருமானம், சொற்பொழிவு நன்று.
115,3+4+சனி பகவான்
சகோதர சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு உண்டு, பிறந்த இடத்தை மாற்றி எழுதுவதில் தடை உண்டு, தாய் தந்தையர் வழியில் மணவாழ்வு மகிழ்ச்சி இல்லை அல்லது சரி இல்லை,
வீடு வண்டி வாகனம் தாமதமாக கிடைக்கும்.
116,7+12 சுக்கிரன்
மனைவி வழியில் திரையம் உண்டு, பிரயாணம் உண்டு, மனைவி சுகம் உண்டு, யூரின் ப்ராப்ளம் கல்லடைப்பு பெரும்பாலானருக்கு வருகிறது
117,8+11 புதன்
வழக்கில் வெற்றி வழக்கு வந்தால் இருமுறை வரும் இருமுறையும் வெற்றி, பூர்வீக சொத்து உயில் சொத்து உண்டு, எல்ஐசி இன்சூரன்ஸ் கிடைக்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு, விபத்து தப்பிப்பார், உழைக்காத வருமானம் உண்டு.
118,9+சந்திர பகவான்
பிறந்தவுடன் தந்தை இடமாற்றம் செலவு 9 வயதில் குடும்பத்திற்கு இடமாற்றம் வரும்.
119,10+சூரிய பகவான்
தொழில் கவுரவம் உண்டு, அந்தஸ்து ஆன்மீகம் அதிகம், தொழிலுக்காக இறைவனை வணங்குவது அதிகம், மாமியார் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
120, விருச்சிகம் சிலை வழிபாடு செய்வார்கள் வீட்டில் சிறிய சிலையாவது வைத்து வணங்குவார்கள். என்ன நினைக்கிறார்களோ அதை சாதிக்கப் பிறந்தவர்கள்.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️