உங்கள் லக்கினம் என்னவென்று பாருங்கள்…
உங்கள் லக்கினம் ரிஷபம் அல்லது ராசி ரிஷபம் ஆக வந்தால் அதற்குரிய பலனை தந்திருக்கிறேன் படித்துப் பார்த்து தங்களுடைய கருத்துக்களை தாருங்கள்.
1, கவர்ச்சியான கண்கள் அல்லது இவருடைய கண் பார்வைக்கு மேக்னெட் பவர் உண்டு.
2, புதியவர்கள் இடத்தில் எளிதில் பழகுவார்.
3, பேச்சில் உறுதி இருக்கும்.
4, சமயோசிதமாய் பேசுவதில் வல்லவர்.
5, கஷ்டத்தை பொறுத்துக் கொள்வார் கஷ்டங்கள் அதிகம் பட்டவர்.
6, பெரும்பாலும் இவர்களுக்கு உறவினர்கள் எதிரி தான்.
7, எதிர்த்தவர் பலம் ஒடுங்கும் வரை திரட்டி அடிப்பார்.
8, காம எண்ணங்கள் உண்டு எதிர்ப்பாளரின் நட்பு உண்டு.
9, தலையில் நீர் கோர்வை பிரச்சனை வரும்.
10, எண்பது சதவீதம் பேர் மதுபான பிரியர் அல்லது வெறியர்.
11, சுகவாசி ஜாலியான பேர்வழி.
12, இவரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.
13, எதிலும் ஈடுபட்டால் அதில் ஆழ்ந்து போய்விடுவார்.
14, கலா ரசிகர் டிவி சினிமா விரும்பி பார்ப்பார்.
15, தன்னை சிறப்பாக அலங்கரித்துக் கொள்வார்.
16, தவறான ஒரு பழக்கம் இருக்கும்.
17, முதலில் சிரிப்பு பிறகு பேச்சு.
18, பிறர் அஞ்சம்படியான அறிவுத்திறமை புலமை இவர் பேச்சில் தென்படும்.
19, இவருக்கென்று ஒரு கொள்கை இருக்காது இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் பிரச்சனைகள்.
20, பிறருக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசி ஜெயிப்பதில் வல்லவர்.
21, குதர்க்கமான குதுகுத்தி பேச்சு உண்டு பிறரை ஏளனம் செய்வதில் வல்லவர்.
22, பிற்காலத்தில் வாய் குழரும்.
23, கண்டபடி சாப்பிட மாட்டார் அளவாக சிறப்பாக சாப்பிடுவார்.
24, டீ காபி மது போன்றவற்றில் பிரியம் நூற்றுக்கு எம்பது சதவீதம் பேர் மது பிரியர்கள் உண்டு.
25, கவர்ச்சிகரமான உடைகளை மடிப்பு கலையாமல் அணிவார்.
26, சகோதர சகோதரிகள் உண்டு ஆனால் ஒற்றுமை குறைவு.
27, பெண்களால் பிரச்சனைகள் உண்டு
28, தாய் மனைவி சகோதரி நங்கையால் கொழுந்தியால் பெண் குழந்தைகள் இவர்களால் துன்பங்கள் இவர்களாலே பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
29, எதையும் தாங்கும் இதயம் உண்டு
30, கம்யூனிகேஷன் நன்று எண்பது சதவீதம் பேருக்கு செல்போன் அத்துபடி.
31, தகவல் தொழில்நுட்பத்தில் கவுரவம் எதிர்பார்ப்பார்.
32, பரிசு பெற யோகம் உண்டு.
33, பெரும்பாலும் வேறு மொழி தெரியும் எழுதவும் படிக்கவும் தெரியும்.
34, விளையாட்டு யோகா மெடிசன் ஒரு கலையில் திறமை உண்டு.
35, ஆராய்ச்சி மனப்பான்மை உடையவர்.
36, பணப் பிரச்சனைகள் இருக்கும் கடன் உண்டு.
37, இவர் தேவைக்கேற்ற பணம் நண்பர்கள் உதவி உண்டு.
38, சுய முயற்சியால் பணம் வயது வளர வளர முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
39, சிறுவயதில் வறுமை மத்திம வயது ஓரளவு பின் வயதில் நல்ல வசதி பொருளாதாரம் நிலை ஏற்படும்.
40, தாயார் மீது அன்பு உடையவர்.
41, தாயாருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
42, தாய்க்கு அடிக்கடி மனநிலை உடல்நிலை பாதிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
43, கல்வி வளர்ச்சியில் தடை உண்டு.
44, வாகனம் அல்லது வீடு ஏதாவது ஒன்றுதான் முன் அமையும்.
45, பெரும்பாலும் கிழக்கு தெற்கு பார்த்த மனைகள் அமைகின்றது.
46, இவர் வாங்கும் வீட்டு மனைகள்
பாளையம், புறம், கார்டன், பட்டி, அவென்யூ என்ற பெயர் முடிவில் வரும்படி இவர் இடம் வாங்கும் குடியிருக்கும் ஊர் பெயர் வரும்.
47, ஏதாவது ஒரு பதவி அல்லது சமுதாயப் பதவி தேடி வரும்
48, முதல் சொத்து விரயம்.
49, தாய்க்கு கால் எலும்பு முறிவு இருக்கும்.
50, புத்திர பாக்கியம் உண்டு
51, குழந்தைகளை அற்புதமாக வளர்த்துவார்.
52, பெரும்பாலும் இவர்களுக்கு இரண்டு குலதெய்வம் அல்லது இரண்டு பக்கம் குலதெய்வ ஆலயங்கள் இருக்கும்.
53, காதல் ஒன்று இரண்டு காதல் இவர்களுக்கு பெரும்பாலானவருக்கு ஏற்படுகிறது.
54, தாய்மாமன் அனு கூடம் இல்லை அல்லது அவருக்கு மணவாழ்வு சிறப்பு இல்லை.
55, திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நிறைவேற்றுவதற்கு படாத போராட்டம்.
56, தாத்தா பெயர் பெற்றவர்
57, உயர்கல்வி ஒன்று அதிலும் தடை உண்டு.
59, கடனுண்டு மனைவி பெயரில் கடன் உண்டு.
60, சர்க்கரை வியாதி உண்டு கண் பிரச்சனை உண்டு.
61, மனைவிக்கு நோய் வயிற்றுப் பிரச்சனை உண்டு.
62, நீர்வகை உணவு நீர் ஆகாரம் விரும்பி சாப்பிடுவார்.
63, பால் தயிர் போன்ற உணவுகள் மிகவும் பிடிக்கும்.
64, கனிகள் சாப்பிட ஆசை ஆனால் அதை சாப்பிட்டால் இவருக்கு ஏதேனும் ஒரு உடல் பாதை வந்து விடுகிறது.
65, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் பிரச்சனை.
66, வேலைக்குப் பெண்களை அமர்த்துவதில் பிரச்சனை.
67, மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
68, திருமண வாழ்வில் பிரச்சனை இருக்கும்.
69, இவர் திருமணம் செய்வதில் பல தடைகளை சந்தித்து வந்த ஜாதகங்கள் இந்த லக்கனம் ஏராளம் ஏராளம்.
70, மனைவி முன்கோபம் உடையவர்.
71, மனைவியால் ஆதாயம் உண்டு.
73, வாடிக்கையாளர் ஓரளவு வரும்.
74, ஒரு நாளாவது டிவி பேப்பரில் வருவார்.
75, கார் வாங்கும் ஆசை உண்டு. கார் பிரியர்
76, பிரயாணப் பிரியர்
77, ஏதேனும் ஒரு உயிர் சொத்து உண்டு. அல்லது மனைவி வெளியில் இருந்து சொத்து வரும்.
78, எந்த சொத்து வந்தாலும் அல்லது ஏதேனும் ஒரு சொத்தில் கட்டாயமாக ஒரு வழக்கு உண்டு.
79, திடீர் அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாறுவார்.
80, குழந்தைகளை வெளியூர் வெளி மாநிலங்களில் படிக்க வைக்கும் யோகமுண்டு.
81, குழந்தைகளுக்கு சொத்துண்டு
82, ஆயுள் கண்டம் ஏற்பட்டு தண்டிப்பார்
83, மனைவி குடும்பத்தால் ஒரு அவமானம் உண்டு.
84, எல் ஐ சி லாபம் உண்டு
85, அமானுஷ்ய அறிவு உண்டு அற்புதம்.
86, தகப்பனார் புகழ்பெற்றவர்
87, தகப்பனுக்கு பதவி உண்டு சொத்துண்டு.
88, தந்தைக்குத் தொழில் உண்டு
89, தந்தை செய்த தொழிலை இவரும் சில காலம் செய்வார் அல்லது அதை சிறப்பாக செய்வார்.
90, தந்தை மகன் உறவில் சில பிரச்சனைகள் உண்டு.
91, வெளி மாநிலம் வெளிநாடு தீர்த்த யாத்திரை உண்டு.
92, அரசாங்க அரசியல் ஈடுபாடு உண்டு அல்லது சமுதாய ஈடுபாடு அதிகம்.
93, இவர் வாழ்வில் மாற்றங்கள் பல பல உண்டு
94, தந்தையின் தொழில் குலத்தொழில் உண்டு.
95, இவர் பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்.
96, கீழ் நிலையில் இருந்தாலும் மேல் நிலைக்கு வந்து விடுவார்.
97, தொழில் சார்ந்த பிரயாணங்கள் அதிகம் உண்டு.
98, தொழிலில் இழப்பை சந்திக்காத ரிஷபம் இல்லை.
99, தொழிலில் கடன் உண்டு வழக்கு உண்டு.
100, ஜவுளி புக் ஸ்டோர் வாகனத்துறை சுரங்கம் எல்ஐசி உணவுத்துறை பேங்க் ஜோதிடம் எலக்ட்ரிக்கல் ரயில்வே ரியல் எஸ்டேட் ஜெராக்ஸ் மேற்கண்ட இந்த தொழில்கள் ஆடிட்டிங் தொழில் இவருக்கு ஏதேனும் ஒன்று சிறப்பாக அமைகின்றது.
101, கன்னி மகரம் கும்பம் விருச்சிகம் இந்த ராசி லக்னக்காரர்கள் நன்மையைச் செய்கின்றார்கள்.
102, உறவினர்களை விட நண்பர்களை அதிகமாக நேசிப்பார் அல்லது அந்த உறவினர்கள் நண்பர்கள் போல் பழகக் கூடியவர்களைத்தான் பிடிக்கும்.
103, இவருடைய 28 ஆவது வயதுக்கு பிறகு ஆசைகள் படிப்படியாக நிறைவேற ஆரம்பிக்கும்.
104, மூத்த சகோதரன் இருந்தால் அவருக்கு மணவாழ்க்கை பிரச்சனை பாதிப்பு ஏற்படுகிறது.
105, வெளி மாநிலம் வெளிநாட்டு பயணம் உண்டு.
106, பெரும்பாலும் வெளிநாடு செல்லக்கூடிய லக்கனம் ரிஷபம்.
107, தூக்கப் பிரச்சினை உண்டு.
108, கால் பிரச்சனை காலில் ஒரு எலும்பு முறிவு பாதிப்பு உண்டு.
109, சகோதரத்திற்கு விட்டுக் கொடுப்பார்.
110, மருத்துவத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பு இவர் செய்வார்.
111, பூமி சம்பந்தமான ஒரு இழப்பு இவருக்கு உண்டு.
112, வாடகை வருமானம் வரும்படி முதிர்ந்த காலத்தில் மனை இவருக்கு அமையும்.
113, கூட்டாளிகளால் விரையும் உண்டு.
114, நூற்றுக்கு 50 சதவீதம் பேருக்கு இரண்டு திருமணங்கள் ஏற்படுகின்ற லக்கனம்.
115, நிம்மதியற்ற தாம்பத்தியம்.
116, இவர்களை தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்த முடிவதில்லை அல்லது திருப்தி அடையாது.
117, வீதியின் நடு
118, மாட்டுத் தொழுவோம் இவர்கள் வீட்டில் ஆடு மாடு மேய்த்தவர்கள் உண்டு.
119, இவர்கள் ஒரு ஆலயம் சென்றால் ஆலயத்தில் உள்ள மாடு இவரை உரசி சென்று செல்லும்.
120, இவர்கள் வசிக்கின்ற பகுதி பெண்கள் அதிகம் வாழுகின்ற பகுதி அல்லது லேடீஸ் ஹாஸ்டல் பக்கத்தில் இருக்கும்.
121, இவர்கள் வீடு அருகில் பஸ் ஸ்டாப் இருக்கும் அல்லது பேருந்து நிலையம் பஸ் டிப்போ அருகில் இருக்கும்.
122, இவர்கள் வீட்டு அருகில் ஏடிஎம் அல்லது பெண்கள் அழகு நிலையம் சினிமா தியேட்டர் இருக்கும்.
123, இந்த ராசி காதல் ராசி காமராசி என்ற பெயரும் உண்டு.
124, சினிமா கலைஞர்கள் தொடர்பு இவர்களுக்கு வரும்
125, சொகுசு வாகனம் உண்டு யாதவர்கள் தொடர்பு உண்டு.
126, இவர்கள் வீடு கட்ட வேண்டும் மாடியில் ஒரு வீடு எடுத்து அந்த வீட்டில் இவர் குடியிருப்பது ஆசை உண்டு பெரும்பாலும் அப்படி இருப்பார்கள்.
127, வீட்டின் மீது பெரும்பாலருக்கு திருப்தி இருப்பதில்லை ஏனென்றால் இவர்கள் வீடு மிகப் பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என்கின்ற கனவு உடையவர்.
128, ஏதேனும் ஒரு வகையில் வெளிநாட்டு வருமானம் இவருக்கு வரும். அல்லது வெளிநாட்டில் வாடிக்கையாளர் அமைக்கின்றார்.
129, மனைவியால் விரயத்தை சந்திக்காத அல்லது மனைவிக்கு கால் நோய் அல்லது கர்ப்பப்பை பிரச்சனை வருகிறது மனைவிக்கு மருத்துவச் செலவை அதிகமாக இந்த லக்கனம் செய்கின்றது.
130, இந்த ராசிக்கு நீர் கோர்வை உள்ள காரணத்தினால் அடிக்கடி சளி பிடிக்கின்றது சிறு வயதில் மூக்கு ஒழுகுவது அதிகமாக இருக்கும்.
131, குட்டி என்று அழைக்கப்படும் நபர்கள் வீட்டில் இருப்பார்.
132, காமதேனு வழிபாடு இவருக்கு சிறப்பு.
133, ரோகிணி நட்சத்திரம் அதற்குண்டான பலன்கள்
134,வளர்ப்புத் தாயிடம் வளர்ந்தவர்
135,வேடதாரி
136,இவர்கள் குடும்பத்தில் காதல் உண்டு. காதல் திருமணம் உள்ள வீடு
137,நரம்பு ஸ்கின் தொந்தரவு உண்டு
138, மாற்றுத்தாய் பால் குடித்து வளர்ந்தவர்.
139, அடுத்தவரை உருவாக்குபவர் அடுத்தவரின் பணம் புழங்கும்.
140, ஜோதிட ஆர்வம் உண்டு ஏதேனும் ஒன்றை எழுதிக் கொண்டே இருப்பார்.
141, தாய்மாமன் இடம் பத்திரம் பிரச்சனை உண்டு.
142, படிப்பில் திருப்தி வராது.
143, பெண் நண்பர்கள் அதிகம்.
144, மிருகசீரிட நட்சத்திரம் பலன்கள்
145, புத்திர சோகத்தை சொல்லும்.
146, பொருளாதாரம் நன்று.
147, குழந்தை பிறந்து இரத்தல் அல்லது அவாசன் ஆவது.
148, ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கு இடைவெளி அதிகம்.
149, குழந்தை பிறந்த பின் குடும்பம் பிரிந்து இருக்கும்.
150, விபத்து உண்டு சொத்து பிரச்சனை உண்டு, காணாமல் போனவர்கள் உண்டு
151, மருத்துவ நட்சத்திரம்
152, ஆபரணம் டிரஸ்ட் இவற்றில் கவனம் அவசியம்.
153, கொழுப்பு கட்டி கொழுப்பு சத்தால் அவஸ்தை ஏற்படுகின்றது.
154, கார்த்திகை நட்சத்திரம் உண்டான பலன்கள்.
155, மணவாழ்க்கை சரி இல்லாதவர்களையும் தாய், தந்தை பிரிந்து வாழ்ந்தவர்களையும் ஒரு விபத்து நடந்து அதில் தப்பித்தவரையும் சொல்லும்.
156, கல்யாணம் ஆகாத வரை சொல்லும். அல்லது இந்த வீட்டில் ஒருவர் திருமணம் செய்யாமல் மணவாழ்க்கை பாதிக்கப்பட்டதை சொல்லும்.
157, திருமணமாகி பிரிவது ஒரே வீட்டில் கணவன் மனைவி பேசாமல் இருப்பது இந்த நட்சத்திரம்.
159, எலும்பொடையும் எலும்பு பிரச்சனை உண்டு.
160, உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மருத்துவ குணம் நிறைந்த நட்சத்திரம். இத்துடன் நட்சத்திர பலன் முடிந்தது.
161, கடன் வாங்காத ரிஷபம் இல்லை
162, இரண்டு வருமானம் தேடுவார்கள் பெரும்பாலும் அடிஷனல் தொழில் செய்கின்றார்கள்.
163, 1+6+சுக்கிரன் அதற்கு உண்டான பலன்கள்
164, கடன் வாங்காத ரிஷபம் இல்லை
165, கடன் வாங்கி தொழில் செய்வார்.
166, கடன் வாங்கி யோசிக்க மாட்டார்
167, உத்தியோகம் செய்வது நல்லது அல்லது வேலைக்குச் செல்வது நல்லது
168, கடன் வழக்கு எதிரி இதில் மூன்றில் ஒன்று நிச்சயம்
169, கோபம் அதிகம் உடனே எதிரிகளை சம்பாதித்து விடுவார். ஒன்றுக்கொடையவன் ஆறில் இருக்கின்ற பொழுது இந்த பலன்கள் நடைமுறையில் வந்து விடுகிறது.
170, 2+5+புதன்
இதற்குரிய பலன்கள்
171, பேச்சு மென்மையாக இருக்கும்
172, வாக்குப்பணிதம் உண்டு.
173, ஜோதிடம் ஆசிரியர் வக்கீல் வங்கி தொழில் சிறப்பு.
174, வாக்குறுதி தரக்கூடாது தந்தால் நிறைவேற்றுவது சிரமம்.
175, முதலில் சிரித்துவிட்டு பின்னர் தான் பேசுவார்கள் அப்படி இவர்கள் பேசினால் வெற்றி உறுதி.
176, இரண்டு வருமானம் அவசியம் ஏற்படுகிறது.
177, இரண்டு குல தெய்வங்கள் உண்டு அல்லது இவருக்கு ஏதேனும் ஒரு வகையில் அவ்வாறு செயல்பட்டு விடுகிறது.
178, காதல் திருமணம் உண்டு
179, இரட்டைத்தன்மை பேச்சுக்கள் உண்டு இரட்டை அர்த்த பேச்சுக்கள் உண்டு.
180, இரண்டு மாமன் உண்டு
181, குழந்தை இரண்டு கல்லூரி 2 பள்ளி இரண்டு, இப்படி இவருக்கு வரும்
182, 3+சந்திரன் இதற்கு உண்டான பலன்கள்
183,இளைய சகோதரன் உண்டு.
184, மூணு 11 பெண்வீடாக வருவதால் சகோதரி உண்டு.
185, எந்த ஒரு வேலையும் இரு முறை முயற்சி செய்ய வேண்டும்.
187, இ என் டி ப்ராப்ளம் உண்டு
188 4+சூரியன் இதற்கு உண்டான பலன்கள்
188, மாடியில் குடி இருப்பார்
189, வீட்டு அருகில் கோபுரம் தெரியும்.
190, வீட்டினால் திருப்தி இல்லை
191, அரசாங்க சலுகை வீட்டிற்காக கிடைக்கும்.
192, தாய் ஓட்டு வீட்டில் குடியிருந்தவர்
193, ஹீல்ஸ் ஏரியாவில் வீடு வாங்க ஆசை
194, தாய் மூத்தவராக இருக்கலாம் அல்லது தாய் வழியில் அரசாங்க உத்தியோகம் உண்டு அல்லது தாயின் உடன் பிறந்தவர் உத்தியோகத்தில் இருப்பார்.
195, 7+12+செவ்வாய் இதற்கு உண்டான பலன்கள்
196, மனைவி வழியில் விரயம் உண்டு நோய் உண்டு மருத்துவச் செலவு உண்டு.
197, தாம்பத்திய சுகம் குறைவு.
198, கூட்டுத் தொழில் ஆகாது கூட்டாளிகள் ஏமாற்றுவார்
199, முதல் சம்பந்தி ஊனம் ஏற்படும்
200, வெளிநாட்டு வருமானம் உண்டு இரண்டாவது மகன் வெளிநாடு செல்லுவார்.
201, கல்லடைப்பு யூரின் பிராப்ளம் உண்டு
202, குழந்தை தாமதம் என்னில் வெளியூர் செல்லுகின்ற பொழுது தாம்பத்தியம் செய்தால் குழந்தை கருத்தரிக்கும்.
203,8+11+குரு இதற்கு உண்டான பலன்கள்
204, வழக்கில் வெற்றி பெறுவார்.
205, பூர்வீக சொத்து உயில் சொத்து உண்டு.
206, எல்ஐசி இன்சூரன்ஸ் கிடைக்கும்.
207, எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு
208, உழைக்காத வருமானம் உண்டு
209, ஆயுள் பலம் மசாஜ் சென்டர் வர்மக்கலை செய்வார்.
210,9+10+சனி இதற்கு உண்டான பாவக பலன்கள்
211, தந்தையின் தொழில் செய்வார் குலத்தொழில் செய்வார்.
212, ஆசிரியர் தொழில் தேடி வரும்.
213, 50 வயதிற்கு மேல் படிக்கத் தூண்டும்.
214, சாஸ்திர ஈடுபாடு உண்டு.
215, தர்ம கர்மாதிபதி யோகம் பெற்ற லக்னம்.
216, கோவில் திருப்பணிகளில் கலந்து கொள்வார் திருப்பணிகள் செய்வார் கோவில் கட்டுவார்.
217, ஆன்மீக நூல்கள் புராண நூல்கள் அதிகம் வைத்திருப்பார்.
218, மனித நேயம் மிக்கவர் ஒன்றும் இல்லாதவர் இவரிடம் வந்தாலும் அவரை வளர்த்து வெற்றி பெற வைத்து விடுவார்.
219, இவர் என்ன செய்தாலும் இவர் உறவினர்களிடத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.
220, ரிஷபம் லக்னம் ராசி லக்னாதிபதி ரிஷபத்தில் உள்ள ஜாதகருக்கு மேற்கண்ட பலன்கள் இவருக்கு என்ன பலன்கள் நாம் சொல்லுகின்ற போதும் இவர் வந்தவுடன் கேட்கின்ற ஒரு கேள்வி என்னுடைய வேலை தொழில் நன்றாக இருக்குமா என்கின்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள் இந்த கேள்விக்கு சரியான பதில் சொன்னாலே அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்கள்.
அடியேன் இதுவரை கற்றதை பல குருமார்களிடம் கற்றுத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் இணைத்து எந்த நூலிலும் நீங்கள் படிக்க முடியாத எனது ஆய்வு பல ஆண்டுகாலம் செய்து உங்களுக்கு தந்திருக்கிறேன். மேற்சொன்ன பலன்கள் 100% சரியாக வரும் என்பதை கூற இயலாது எண்பது சதவீதம் சரியாக வந்தால் அதுவே மிகச் சிறப்பு என்பது அடியேன் என்னுடைய கருத்து நீங்களும் படித்துப் பாருங்கள் மேற்படி தங்களுடைய மேன்மையான கருத்துக்களை தாருங்கள்.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
திருப்பூர் 9345593143
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️