துலாம் லக்னம்

துலாம் ராசி மற்றும் லக்கினம் காரர்களுக்கு பலன்கள்

1, இயற்கையாக அழகு உடையவர் தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் மேலும் விருப்பம் உடையவர்.

2, இரட்டைப் பெயர் உடையவர்கள் அல்லது மூன்றெழுத்து பெயர்கள் உடையவர்கள் அல்லது இரட்டைப் பெயர்கள் உடையவர்கள் இவர்கள் வீட்டில் கட்டாயமாக இருப்பார்கள்.

3, சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.

4, பிறர் பேசும்போது கவனிக்காதது போல் இருப்பார்கள் ஆனால் இவர்கள் சிஐடி போல் செயல்படுவார்கள்.

5, பெரும்பாலானருக்கு இவரை விட இவருடைய வாழ்க்கை துணை கொஞ்சம் உயரம்.

6,பேசுவதற்கு முன் சிரித்து விடுவார்கள்.

7, கேள்வியின் நாயகன் நாயகிகள் இவரே அதிகம் கேள்வி கேட்பார்கள்

8, நிரந்தர இன்பம் காண விரும்புவார் ஆனால் அந்தரத்தில் நிற்பார்.

9, சந்தோசம் தூரத்தில் அழைக்கும் இவர் நெருங்குவதற்குள் மறைந்து விடும் வீண் சந்தேகமும் பயமும் இதற்கு காரணம்.

10, இரண்டு பக்கமும் பேசுவார் ஆனால் இறுதி முடிவு இவருடையதுதான்.

11, பெண்களாக இருந்தால் மூக்கு குத்த மாட்டார்கள் குத்தினால் இரண்டு மூக்கும் குத்தி மூக்குத்தி போடுவார்கள்.

12, பெரும்பாலானவர்கள் மீசையை எடுத்து விடுகிறார்கள்.

13, முகத்தில் அல்லது உதட்டில் வடு அல்லது மச்சம் வருகிறது.

14, நிரந்தர வருவாய் வரும் இறுதி காலத்தில் மிச்சம் பிடித்து ஓய்வும் அமைதியும் அடைவார்.

15, பணம் கிடைக்கும் பெற்றோர் சகோதரர் சுகம் இவற்றை பராமரிக்க பணம் கிடைக்காது.

16, வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் உண்டு

17, இவர் மாடி வீட்டில் குடியிருந்தால் எல்லா வகையிலும் பரிகாரம் ஆகின்றது.

19, நடிப்பு திறமை உண்டு சிரித்துப் பேசுவார் பிற சிரிக்க பேசுவார்.

20, மனைவிக்கு பயப்படுவார், சில பேர் சுயநலம் உண்டு.

21, பாடம் நடத்தும் போது அதிகம் குறுக்கீடு செய்பவர் துலா லக்னம்.

22, மனைவி குழந்தைகளால் மனக்கவலைகள் இருக்கின்றது, மனைவிக்கு கருக்கலைப்பு,

23, வரவும் செலவும் சரியாக இருக்கும்.

24, தூரதேச யாத்திரை வெளியூர் வெளி மாநில பயணம் அதிக செலவும் செய்வார்.

25, பெருமாள் சம்பந்தமாக பயணம் இறைவனை வணங்குவது உண்டு, பெருமாள் பெயர் உடையவர்களின் அன்னோனிய நட்புக் கொள்வார்.

26, பிறரின் பேச்சை வெட்டி இவர் பேசுவார்

27, இளைய சகோதரருக்கும் இவருக்கும் ஆகாது

28, சகோதர உறவு சிறப்பில்லை, இவருடைய உடல் நலக்குறைவுக்கு சகோதர சகோதரிகளே காரணம் ஆவார்.

29, இவரே மூத்த சகோதரர் போல் செயல்படுவார்

30, மாமனாரர் பிரச்சனை உண்டு,

31, கௌரவம் புகழ் கீர்த்தி உண்டு தோல்வியிலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்

32, பெரும்பாலும் மாடியில் வீடு அமையும்

33, சட்டக் கல்வி சிறப்பு, படிப்பு உண்டு, படிப்பில் ஒரு தடை வந்து விலகும்

34, பெரும்பாலும் பட்டதாரிகளாக உள்ளனர்,

35, நடு வயது வரை மற்றவருக்காக உழைப்பார்

36, வீடு வாகனம் பின்வயதில் அமையும் முதலில் கஷ்டம் பின்வயதில் சுகம்.

37, குடும்பம் அமைந்த வருடம் தாயுடன் பற்று குறையும்.

38, சீட்டு வட்டி தொழில் எம் எல் எம் ஆகாது

39, இவர் முன்னேற்றத்திற்கு தாய் காரணமாவார்

40, இவருடைய கல்வி எப்பொழுது முடிகின்றதோ அப்பொழுது தயார் உடைய கண்டம் முடிகின்றது

41, பதவி தேடி வரும் ஆனால் தாமதமாக கிடைக்கும்

42, குழந்தைகள் இடத்தில் பிரச்சனைகள் இருக்கும்

43, குலதெய்வம் நீர் சார்ந்து இருக்கும் ஊரில் ஆக்ரோஷமான தெய்வங்கள் சுடுகாட்டு அருகில் பெரும்பாலும் குலதெய்வம் அமைகின்றது.

44, மண் சார்ந்த வாகனம் உள்ள குலதெய்வம் அமைகின்றது.

45, தாத்தாவுக்கு பதவி உண்டு உள்ளூரில் பிரபலமானவர்,

46, தாத்தா அல்லது சித்தப்பா இருதரம் உடையவர்களாக இருப்பார்கள்.

47, இரண்டாவது குழந்தைக்கு மணவாழ்க்கையில் சில பிரச்சனைகள் வருகிறது

48, வாடகை வருமானம் உள்ள சொத்துக்கள் இவருக்கு அமையும் 40 வயதிற்கு மேல் 50 வயதிற்குள் அமைகின்றது

49, கார் வாங்கும் யோகம் பின் வயதில் அமைகின்றது முதலில் பழைய கார் வாங்குகிறார் பின்வயதில் புதிய கார் வாங்குவார்.

50, உத்தியோகம் உண்டு, சீருடை பணியாளர்கள் உள்ள குடும்பம்.

51, துலாம் என்றாலே சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பார்

52, உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் உண்டு சிறிய நிலையில் இருந்து உயர்நிலையை அடைந்து விடுவார்கள்.

53, நகை கடன் உண்டு கடன் உண்டு குழந்தைகளுக்காக கடன் படுவார் சகோதரர்களுக்காக கடன் பெற நேரிடும்.

54, வயிறு சார்ந்த நோய், கொழுப்பு கட்டி, சர்க்கரை, மஞ்சக்காமாலை, மூளை தொடர்பான நோய்கள் பெரும்பாலும் அமைகின்றது

55, கொழுப்பு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.

56, காலையில் சூரியன் வழிபாடு செய்வது மிகச் சிறப்பு

57, சுப காரியங்களுக்குத்தான் கடன் படுவார்

58, வழக்கில் கட்டாயம் வெற்றி பெறுவார்

59, ஆயில் மசாஜ் எண்ணெய் குளியல் விரும்புவார், வேலையாட்கள் அடிக்கடி மாறும்.

60, வாழ்க்கைத் துணைக்கு பயப்படுவார், மனைவி அறிவாளி

61, மனைவி தூரத்திலிருந்து வருவார்,

62, துணைவர் தொழில் நஷ்டம் அடைந்தவர்

63, வாழ்க்கைத் துணைவருக்கு கடன் பிரச்சினை உண்டு

64, வாழ்க்கைத் துணைவர் சண்டை பிரியர், பக்திமான், அமானுஷ்ய சக்தி உண்டு,

65, வாழ்க்கைத் துணைவருக்கு ஒரு கண்டம் சில பிரச்சனைகள் வந்து விலகும்.

66, இவர் என்னத்தை அறிந்து அதன்படி நடக்கக்கூடிய மனைவி அறுசுவை சமைக்கும் மனைவி , வருவாய்க்கு தக்கபடி குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் மனைவி அமைவார்.

67, மனைவிக்கு ரத்தம் சம்பந்தமான நோய் கர்ப்பப்பை பிரச்சனை உண்டு

68, நோய் வந்தால் கூட குடும்ப வேலைகளை பெற செய்வது பிடிக்காது அவரே எல்லா வேலையும் செய்வார்.

69, இவருக்கு கூட்டத் தொழில் ஆகாது

70, மண்டை உடையும் ராசி என்பார்கள் ஆக தலையில் ஒரு பாதிப்பு என்றால் உடனடியாக பார்க்க வேண்டும்

71, சர்க்கரை வியாதி பிரச்சனை வரும்

72, உயிர் சொத்து வரும் அது தேவையான சமயத்திற்கு பயன்படாது

73, மூத்த சகோதரத்தால் பூர்வீக சொத்து அழியும்

74, எல் ஐ சி யில் சரியாக பணம் கட்டி செயல்படுத்த முடியாது கட்டாமல் விடுவார் ரெண்டு அல்லது மூன்று முறை விட்டுப் பின் தொடர்ந்து கட்டுவார்

75, தீவிர பெருமாள் பக்தர் திருப்பதி பிடிக்கும்.

76, ஆன்மீக வழிபாடு சிவ பக்தராக இருந்த போதிலும் சங்கரநாராயண வழிபாடு அறந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

77, தந்தை அரசு வழியில் அரசு சார்ந்த வருமானம் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு உண்டு.

78, தந்தைக்கு கால் பாதம் பிரச்சனை உண்டு

79, தந்தை வருமானத்தை சேமிக்க முடியாதவர் தந்தைக்கு நீண்ட நோய் இருக்கும்.

80, தந்தைக்கு இரண்டு சொத்து உண்டு தந்தை வழியில் ஒருவருக்கு மன பாதிப்பு இருக்கும்

81, விவசாயம் துணி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மூலம் வருமானம் உண்டு

82, தந்தை தன் உறவுகளுக்கும் இவர் கல்வி செலவுக்கு செய்தது போக மீதி எதுவும் மிச்சம் வைக்க மாட்டார் மிச்சம் எதுவும் இருக்காது

83, அரசியல் அரசாங்கம் தொடர்பு இருக்கும்

85, ஆசிரியர் ,எல்ஐசி ஏஜென்ட், விவசாயம், பண்ணை, கோவில் கடை நடத்துதல், ஜவுளி, நூல், இரும்பு, இரும்பு சம்பந்தமான அனைத்து தொழிலும், டிரான்ஸ்போர்ட், மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பது,

86, ரத்தின கற்கள் வியாபாரம், உணவு சார்ந்த தொழில்கள்

87, தொழில் உயர்வு நிச்சயம் கிடைத்தாலும் ஒரே நிலையில் இருப்பதில்லை ஆறு மாதம் சிறப்பும் ஆறு மாதம் சில கஷ்டங்களும் மாறி மாறி வரும் ஆனாலும் வெற்றி பெறுவார்.

88, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துன்பமில்லை ஆனால் பதவி உயர்வில் தான் தடை இருக்கும்.

89, கடைவீதி பூக்கடை கிப்ட் பியூட்டி பார்லர் இந்த இடங்கள் இவருக்கு சிறப்பை தருகிறது

90, எடை மெஷின் தராசு வீடு துலாம் லாரி வெயிட் பிரிட்ஜ் இவருக்கு ஒத்துவரும்

91, வியாபார வீடு நீதிபதி வீடு காதல் ராசி காற்றோட்டமான இடம் இவை அனைத்தும் இவருக்கு ஒத்து வருகிறது

92, ராசிக்கல் மோதிரம் பெயர் மாற்றம் செய்வதில் இவருக்கு ஈடுபாடு இருக்கும்

93, எதிரொலி அசிஷரி ஜோதிடம் நன்று

94, தொட்டி கட்டி வீடு இவருக்கு சிறப்பாக இருக்கும்

95, மரம் இவர் வளர்த்தால் வீட்டில் ஒருவருக்கு ஆகாது

96, மாதுளை ஆப்பிள் ஆரஞ்சு செம்பருத்தி மல்லி, ரோஜா செவ்வந்திப் பூ தேன்கூடு இவருக்கு சிறப்பு

97, சுவாதி நட்சத்திரம்
காணாமல் போனவர்கள், திதி கொடுக்காத குடும்பம், வீட்டில் வயதானவர்கள் திடீர் மரணங்கள் ஏற்பட்ட குடும்பம் சிறுவயதில் இறந்தவர்கள் உள்ள குடும்பம் சாமி ஆடுதல் உள்ள குடும்பம் மருத்துவ நட்சத்திரம் இந்த நட்சத்திரம்

98, விசாக நட்சத்திரம்
ஆசிரியர் வயது மீறிய காமம் நாய் கடி உண்டு இரட்டைப் பிறவி சன்னியாசம் சென்றவர்கள் வீட்டில் உண்டு வயது வித்தியாசம் உள்ள காதல் இவருக்கு வரலாம் அல்லது இவர் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நடக்கலாம்

99,1+8+சுக்கிரன்
வழக்கு உண்டு விபத்து தப்பித்தவர் ஆயுள் பலம் உண்டு அமானுஷ்ய சக்தி உண்டு, எல் ஐ சி டி ஆதாயம் உண்டு, சாமி ஆடுதல் குறி சொல்லுதல் வீட்டில் ஒருவர் இருந்திருப்பார், உயில் சொத்து உண்டு.

100,2+7+செவ்வாய்
மனைவியால் வருமானம் பெண்ணாக இருந்தால் கணவனால் வருமானம் தொழிலுக்கு உதவி செய்வார் மனைவி வரவு செலவு பார்க்கும், 80 சதவீதம் பணத்தட்டுப்பாடு வராது, வாடகை வருமானம் உண்டு, திருமணம் ஆன பின் பொருளாதாரம் வளர்ச்சி, அதிகாரமாக பேச வேண்டும் அப்பொழுது வெற்றி.

101,3+6+குரு பக்கத்து வீட்டில் பிரச்சனை, எல்லை காம்போண்டு வேலி பிரச்சனை உண்டு, சகோதரனோடு கருத்து வேறுபாடு வரும், பங்கு பிரிப்பதில் பிரச்சனை வழக்கு கடன் ஏற்படும்.

102,4+5+சனி
தாயார் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லை, முதல் குழந்தை திருமண தாமதம், பூர்வீக சொத்தில் இருக்க விருப்பம் அதிகம், வீட்டருகில் கோவில் உண்டு, சத்திரம் சாவடி அருகில் இருக்கும், இடம் வீடு சொத்து அமைய தாமதம் ஏற்படும், உள்ளூரிலேயே படிக்கத் தூண்டும், தாய் வழியில் ஆசிரியர் ஜோதிடர் உண்டு, தாய் பிறந்த உடன் சிறுவயதில் ஒருவர் பிரிந்திருப்பார் அல்லது இறந்திருப்பார், தாய் தந்தையை பிரிந்து இருப்பார் அல்லது இழந்து வாழ்ந்தவர் சில குடும்பங்களில் உண்டு, இருதய பயமுண்டு, குழந்தைகளின் சுப காரியம் தாமதம், தாத்தா வகையில் குறி சொன்னவர்கள் சாமி ஆடி அவர்கள் உண்டு. தாத்தா வழியில் மணவாழ்க்கை சரியில்லாதவர்கள் உண்டு, தாத்தா வழியில் இரு திருமணம் செய்தவர்கள் உண்டு.

103,9+12+புதன்
தகப்பனாருக்கு பெரிய மருத்துவ செலவு, அதனால் விரைய செலவு, விவசாய நிலம் உண்டு, தானதர்மம் உண்டு, தந்தை ஆன்மீகவாதி, ஜாதகருக்கு நீண்ட தூர பயணம் உண்டு, வெளி மாநிலம் வெளிநாடு பயணம் உண்டு, ஜோதிடத்திற்கு நல்லது, தாத்தா வெளியில் இரு திருமணம் உண்டு.

104,10+சந்திரன்

உணவுத் தட்டுப்பாடு இல்லை, பெண் குழந்தைகள் உண்டு, தொழிலில் ஏமாற்றும் இடமாற்றம் உண்டு, வெளிநாடு வெளி மாநிலம் உண்டு, முதல் தொழில் இடமாற்றம் உண்டு, தாயார் ஆதிக்கம் உள்ள வீடு.

105,11+சூரியன்
மழை மழை சார்ந்த பகுதிகள் ஆகாது, மேடான பகுதிகள் ஆகாது, காம்பவுண்டு சுவரில் அமரக்கூடாது, மூத்த சகோதரன் நண்பர்கள் இவர்களால் கஷ்டம் மன உளைச்சல் உண்டு, தந்தை அன்பில்லை தந்தைக்கு உடல் குறைவு, தந்தை பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர், பலர் தந்தையை பிரிந்து வந்திருப்பார்.

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️