உத்திரம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

உத்திரம்:

போழும் மதியும் புனக் கொன்றைப்

புனர்சேர் சென்னிப் புண்ணியா!

சூழம் அரவச் சுடர்ச் சோதீ

உன்னைத் தொழுவார் துயர் போக

வாழும் அவர்கள் அங்கங்கே

வைத்த சிந்தை உய்த்து ஆட்ட

ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.

உத்திர நட்சத்திரம்

சாஸ்தா நட்சத்திரம், ஆரியமான், கௌரி காலை, ஆணாகப் பிறந்தால் சிறிய வயதில் சில தவறுகளால் குடல் பாதிப்புகள் வந்து விடுகிறது, சென்ற இடமெல்லாம் மரியாதை கிடைக்கும், சாப்பாடு கிடைக்கும், உத்திரம் ஊர் கோடியில் ஓர் இடம் வேண்டும் என்ற பழமொழி உண்டு, வாழ்க்கை முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது, உணவுத் தொழில் செய்தால் சிறப்பு இது பலருக்கு ஒத்து வருகிறது, விவசாயம் சிறப்பு, காணி நிலம் வேண்டும் என்கிறது இந்த நட்சத்திரம், ஊருக்கு உழைப்பவர்கள், பொதுச் சேவை உண்டு, சிலருக்கு பொருளாதாரம் பிரச்சனைக்கு உரியதாக மாறிவிடுகிறது, பொதுநல சேவையாக செய்து அதில் பொருளாதார ஈட்ட வேண்டும், மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்கக் கூடாது, மனைவி சொல் மிகச் சிறப்பு, தீய பழக்கங்கள் ஆகாது, ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள் இருப்பார்கள் அல்லது இரண்டு திருமணம் செய்தவர்கள் இருப்பார்கள், ஒதுக்குப்புறத்தில் ஏதேனும் ஒரு நிலம் வாங்கி பத்திரம் பதிவு செய்தால் நன்மைகள் உண்டாகும் அதனால் பொருளாதாரம் சிறப்படையும், உத்திரம் தாங்கிப் பிடிக்கும் ஆக இவர் எது வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள், வாரம் அல்லது வாதம் ஒரு முறை அரச மரத்து அடியில் இருக்கும் விநாயகரை வழிபடுவது சிறப்பு, ஆஞ்சநேயருக்கு தட்டு நிறைய கொய்யாப்பழம் வைத்து தான தர வேண்டும், வைரவர் வழிபாடு சிறப்பு, முன்னோர்கள் சொத்து தகராறு இருக்கும் அதை முடித்து விட்டால் சிறப்புடைவார்கள், சீக்கிரம் சொத்து பிரச்சனையை தீர்த்து விட வேண்டும்…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️